Sunday, December 22, 2013

Thiruppavai 20 (Muppathu Moovar) - திருப்பாவை 20 (முப்பத்து மூவர்)

இயற்றியவர்: ஆண்டாள் 

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திரள் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலை(ச்) செவ்வாய்(ச்) சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.


Thiruppavai 19 (Kuthu Vilakkeriya) - திருப்பாவை 19 (குத்து விளக்கெரிய)

இயற்றியவர்: ஆண்டாள் 


குத்து விளக்கெரிய கோட்டு(க்) கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி(க்)
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்து(க்) கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மை(த்) தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஓட்டை காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.


Thiruppavai 18 (Unthu Mathakalitran) - திருப்பாவை 18 (உந்து மத களிற்றன்)

இயற்றியவர்: ஆண்டாள் 


உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி(ப்)
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாட(ச்)
செந்தாமரை(க்) கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


Thiruppavai 17 (Ambarame Thaneere) - திருப்பாவை 17 (அம்பரமே தண்ணீரே)

இயற்றியவர்: ஆண்டாள் 


அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் 
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் 
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே 
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் 
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகு அளந்த 
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடி(ச்) செல்வா பலதேவா 
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.



 

Thiruppavai 16 (Nayakannai Nindra) - திருப்பாவை 16 (நாயகனாய் நின்ற)

இயற்றியவர்: ஆண்டாள் 


நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணி(க்) கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழ(ப்) பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலை(க்) கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.


Thiruppavai 15 (Elle Elang Kiliye) - திருப்பாவை 15 (எல்லே இளங்கிளியே)

இயற்றியவர்: ஆண்டாள் 

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனை (ப்) பாடேலோர் எம்பாவாய்.



Thiruppavai 14(Ungal Puzhakkadai) - திருப்பாவை 14(உங்கள் புழக்கடை)

இயற்றியவர்: ஆண்டாள் 

உங்கள் புழக்கடை(த்) தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடி(க்) கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கய(க்) கண்ணானை(ப்) பாடேலோர் எம்பாவாய்.



Thiruppavai (Kanaithilang Katrerumai) - திருப்பாவை (கனைத்து இளம் கற்றெருமை)

இயற்றியவர்: ஆண்டாள் 

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி(ச்)
சினத்தினால் தென் இலங்கை(க்) கோமானை(ச்) செற்ற
மனத்துக்கு இனியானை(ப்) பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய் 


Monday, December 16, 2013

Thiruppavai 13(Pullinvaai Keendanai) - திருப்பாவை 13(புல்லின் வாய் கீண்டானை)

இயற்றியவர்: ஆண்டாள் 

புல்லின் வாய் கீண்டானை(ப்) பொல்லா அரக்கனை(க்)
கில்லி(க்) களைந்தானை(க்) கீர்த்திமை பாடி(ப்) போய்(ப்)
பிள்ளைகள் எல்லாரும் பாவை(க்) களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரி(க்) கண்ணினாய்
குள்ள(க்) குளிர(க்) குடைந்து நீராடாதே
பள்ளி(க்) கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்



Thiruppavai (Katrukaravai Kanangal) - திருப்பாவை (கற்று கறவை கணங்கள்)

இயற்றியவர்: ஆண்டாள் 

கற்று(க்) கறவை(க்) கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழிய(ச்) சென்று சேறு(ச்) செய்யும்
குற்றம் ஒன்றிலாத கோவலர் தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வா பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய் 



Thiruppavai (Notru Chuvargam) - திருப்பாவை (நோற்று சுவர்க்கம்)

இயற்றியவர்: ஆண்டாள் 

நோற்று(ச்) சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்ற(த்) துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்ற(ப்) பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய் 



Thiruppavai (Thoomani Maadathu) - திருப்பாவை (தூமணி மாடத்து)

இயற்றியவர்: ஆண்டாள் 

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய(த்)
தூபம் கமழ(த்) துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணி(க்) கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
எம(ப்) பெருந்துயில் மந்திர(ப்) பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய் 


Thiruppavai (Kizh Vaanam Vellendru) - திருப்பாவை (கீழ் வானம் வெள்ளென்று)

இயற்றியவர்: ஆண்டாள் 

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பறந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை(ப்) போகாமல் காத்து உன்னை(க்)
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடி(ப்) பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை(ச்) சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் 



Thiruppavai (Keesu Keese Enru Engum) - திருப்பாவை (கீசு கீசு என்று எங்கும்)

இயற்றியவர்: ஆண்டாள் 

கீசு கீசு என்று எங்கும் ஆனை(ச்) சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்(ப்) பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப(க்) கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயக(ப்) பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனை(ப்) பாடவும் நீ கேட்ட கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்.



Sunday, December 15, 2013

Thiruppavai (Pullum Silambina Kaan) - திருப்பாவை (புள்ளும் சிலம்பின காண்)

இயற்றியவர்: ஆண்டாள்  

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ள(ச்) சகடம் கலக்கழிய(க்) காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்து(க்) கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் 


Thiruppavai (Maayanai Mannu) - திருப்பாவை (மாயனை மன்னுவட)

இயற்றியவர்: ஆண்டாள் 

மாயனை மன்னுவட மதுரை மைந்தனை(த்)
தூய பேரு நீர் யமுனை(த்) துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை(த்)
தாயை(க்) குடல் விளக்கம் செய்த தாமோதரனை(த்)
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவி(த்) தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க(ப்)
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் 


Thiruppavai (Aazhimazhai Kanna) - திருப்பாவை (ஆழி மழை கண்ணா)

இயற்றியவர்: ஆண்டாள் 

ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்)
பாழிய் அம் தோளுடை(ப் ) பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் 



Thiruppavai (Ongi Ulagalantha) - திருப்பாவை (ஓங்கி உலகளந்த)

இயற்றியவர்: ஆண்டாள் 

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு(ச்) சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாறி பெய்து
ஓங்கு பெரும் செந் நெல் ஊடு கயலுகள(ப்)
பூங்குவளை(ப்) போதில் பொறி வண்டு கண் படுப்ப(த்)
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் 


Thiruppavai (Vaiyathu Vazhveergal) - திருப்பாவை (வையத்து வாழ்வீர்காள்)

இயற்றியவர்: ஆண்டாள் 

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு(ச்)
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பைய(த்) துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை(ச்) சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய.



Thiruppavai (Maargazhi thingal) - திருப்பாவை (மார்கழி திங்கள்)

இயற்றியவர்: ஆண்டாள் 

மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ(ப்) படிந்தேலோர் எம்பாவாய்