ராகம் : சுருடி
இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
பார்வை ஒன்றே போதுமே
கள்ள பார்வை ஒன்றே போதுமே
சங்க பதுமநிதி இரண்டும் வலியதந்தால் என்ன ||
கார்முகில் போல் வண்ணன் கதிர் என்ன மதி என்ன
கருவிழி கடலினை சற்றே திறந்து
கருணை மழை பொழிந்தேன்
அகம் குளிரும் கள்ள ||
அன்னை யேசொதை அருகினிலே சென்றிவன்
வெண்ணை திருடி வந்து விந்தை சொல்ல போனான்
அன்னையின் பின்னே சென்று அணைந்து கொண்டு நின்று
சொல்லாதே என்று கண்ணால் சொல்லிடும் ||