Tuesday, March 8, 2011

Palvadiyum Mugam - பால்வடியும் முகம்


ராகம்: நாட்ட குறுஞ்சி 
இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர்                

பால்வடியும் முகம் நினைந்து
நினைந்து உள்ளம் பரவசம் மிக வாகுதே 

நீலக்கடல் போலுன் நிறத்தழகா கண்ணா 
எந்தன் நெஞ்சம் குடி கொண்டு 
அன்று முதல் என்றும் சிந்தனை செய்யதொழிய (பால்வடியும்)

வானமுகத்தில் சட்று  மனம் வந்து நோகினும்
மோன முகம் வந்து தோணுதே 
தெளிவான தண்ணீர் தடத்தில் சிரித்த முகம் வந்து காணுதே 
கான குயில் குரலில் கருத்தமைந்திடினும் 
கான குழலோசை மயக்குதே 

கருத குழலோடு நிறுத்த மயிலிரகிருக்கி  அமைத்த திரத்திலே
கான மயிலாடும் மோன குயில்பாடும் நீல நதி ஓடும் வனத்திலே
குழல் முதல் எழில் இசை குழைய வரும்
இசையின் குழலோடு மிளிரில கரத்திலே 
கதிருமதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே 
காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே 
ஏன் மனதை இறுதி கனவி நனவினோடு பிறவி
பிறவி தோறும் கனித்துருக வரம் தருக (பால்வடியும்)



5 comments:

  1. Nice to see lyrics in tamil. ஆனால் பல இடங்களில் பிழைகள் உள்ளன. வார்த்தைகள் பல காணவில்லை! தயவு செய்து திருத்தவும். I found this to be correct - http://arthyvijayaraghavan.wordpress.com/2009/05/22/palvadiyum-mugam-mp3-download/

    ReplyDelete
    Replies
    1. Yes many lines are wrong and words missing - whoever has given that should have checked.

      Delete
  2. Here is the correct lyrics.
    பல்லவி
    பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவச மிக வாகுதே...........கண்ணா (பால்)
    அனுபல்லவி
    நீலக்-கடல் போலும் நிறத்தழகா எந்தன் நெஞ்சம் குடி கொண்ட அன்று முதல் இன்றும் எந்தப்-பொருள்
    கண்டும் சிந்தனை செலா-தொழியப்- (பால்)
    சரணம்
    வான முகட்டில் சற்று மனம் வந்து நோக்கினும் உன் மோனமுகம் வந்து தோணுதே தெளிவான
    தெண்ணீர்த்-தடத்தில் என் சிந்தனை மாறினும் உன் சிரித்த முகம் வந்து காணுதே சற்று
    கானக்-குயில் குரலில் கருத்தமைந்திடினும் அங்கு உன் கானக்-குழலோசை மயக்குதே
    (மத்யமகாலம்)

    கருத்த குழலொடு நிறத்த மயிலிற கிறுக்கி அமைத்த திறத்திலே கான மயிலாடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே
    குரல் முதல் எழில் அசை குழைய வரும் இசையில் குழலொடு மிளிர் இளம் கரத்திலே
    கதிரும் மதியும் என நயன விழிகள் இரு நளினமான சலனத்திலே
    காளிங்க சிரத்திலே கதித்த பதத்திலே என் மனத்தை இருத்தி
    கனவு நனவினொடு பிறவி பிறவி தொறும் கனிந்துருக வரந்தருக பரங்கருணைப் (பால்)

    ReplyDelete
  3. தெண்ணீர்த்-----> தண்ணீர்த்

    ReplyDelete
  4. More corrections:
    முதல் ---->அமுத
    காளிங்க ----காளிங்கன்

    ReplyDelete