ராகம் : ஜோன்புரி
இயற்றியவர் : கோபாலக்ருஷ்ண பாரதியார்
எப்போ வருவாரோ எந்தன்கலி தீர
அப்பர் முதல் மூவரும் ஆளுடை அடிகளும்
செப்பிய தில்லை சிதம்பரநாதன் ||
நற்பருவம் வந்து நாதனை தேடும்
கற்பனைகள் முற்ற காட்சி தந்தால் ||
அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்
போற்பதத்தை காணேன் பொன்னம்பலவாணன்
(கோ)பாலக்ருஷ்ணன் போற்றி பணிந்திடும் ஈசன் மேலே
காதல் கொண்டேன் வெளிப்படக்கானேன் ||
போற்பதத்தை காணேன் என்பதற்கு பதிலாக பொற்பதத்தை காணேன் என்று இருக்க வேண்டும் அல்லவா.
ReplyDeleteபொன் போன்ற பாதத்தை என்பதை ராகத்தோடு பாடும்போது காதில் பொன் என்று கேட்கும்... அந்த வரிகள் சிவனின் பாதம் தொட்டு எதிரொலிப்பது குறில் எல்லாம் நெடில் ஆகுது பாதம் கூட பதம் ஆகுது நெடில் கூட குறில் ஆகுது
Delete“RaagaththOdE paadi namellaam maghizhvOmE. IlakaNam oru puRam irukkattum.” - “M.K.Subramanian.”
ReplyDeleteவெளிப்பட காணேன் என்றிருக்கவேண்டும்
ReplyDelete