ராகம்: கல்யாணி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
உன்னையல்லால் வேறே கதியில்லை அம்மா உலகெல்லாம் ஈன்ற அன்னை
என்னையோர் வேடமிட்டு உலகநாடக அரங்கில் ஆடவிட்டாய் (அம்மா)
இனி ஆடமுடியாது(என்னால்) திருவுள்ளம் இறங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க | |
நீயே மீனாட்சி காமாட்சி நீலாயதாக்ஷி எனபல பெயருடன் எங்கும் நிறைந்தவள்
என்மன கோயிலினில் எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் | |
Ragam: Kalyani
Composer: Papanasam Sivan.
Unnai allal vere gathi illai amma ulagellam indra annai
ennai oer vedamittu ulaga nadaga arangil aadavittaai
ini aada mudiyaathu (ennaal) thiruullam iranki aadinathu pothumendru ooivalikka | |
neeye Meenakshi Kamatchi Neelayathakshi yenapala peyarudan engum nirainthaval
yen mana koyilinil yezhuntharuliya thaye thirumayilai valarum | |