Friday, January 6, 2017

Ramanuja Killikanni - ராமானுஜ கிளிகன்னி

ராகம்: செஞ்சுருட்டி 

ஆதிசேஷன் அம்சம்மடி ஆண்டாளின் அண்ணனடி
ஆளவந்தாருக்கு  அடிமையடி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |

அரங்கனின் அடிமையடி வேங்கடத்து வேதியனடி
பெரும்புதூர் வள்ளலடி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |

தேவராஜ தாசனடி பார்த்தசாரதி புத்திரனடி
பாருக்கெல்லாம் தெய்வமடி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |

நாரணனை காட்டினான்டி செல்வப்பிள்ளைக்கு தந்தையடி
வைரமுடி சாற்றினான்டி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |

சென்னிய சூடுவாரை வைகுந்ததில் வாழவைக்கும்
உய்யும் வழி அதுவே கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |





Saturday, November 26, 2016

Ashtalakshmi Storam - அஷ்டலக்ஷ்மீ ஸ்தோத்திரம்

ஆதிலக்ஷ்மிஸுமனஸ வம்தித ஸும்தரி மாதவி, சம்த்ர ஸஹொதரி ஹேமமயே 
முனிகண வம்தித மோக்ஷப்ரதாயனி, மம்ஜுல பாஷிணி வேதனுதே | 
பம்கஜவாஸினி தேவ ஸுபூஜித, ஸத்குண வர்ஷிணி ஶாம்தியுதே 
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம் || 1 ||
தான்யலக்ஷ்மிஅயிகலி கல்மஷ னாஶினி காமினி, வைதிக ரூபிணி வேதமயே 
க்ஷீர ஸமுத்பவ மம்கள ரூபிணி, மம்த்ரனிவாஸினி மம்த்ரனுதே |
மம்களதாயினி அம்புஜவாஸினி, தேவகணாஶ்ரித பாதயுதே 
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தான்யலக்ஷ்மி பரிபாலய மாம் || 2 ||
தைர்யலக்ஷ்மிஜயவரவர்ஷிணி வைஷ்ணவி பார்கவி, மம்த்ர ஸ்வரூபிணி மம்த்ரமயே 
ஸுரகண பூஜித ஶீக்ர பலப்ரத, ஜ்ஞான விகாஸினி ஶாஸ்த்ரனுதே | 
பவபயஹாரிணி பாபவிமோசனி, ஸாது ஜனாஶ்ரித பாதயுதே 
ஜய ஜயஹே மது ஸூதன காமினி, தைர்யலக்ஷ்மீ பரிபாலய மாம் || 3 ||
கஜலக்ஷ்மிஜய ஜய துர்கதி னாஶினி காமினி, ஸர்வபலப்ரத ஶாஸ்த்ரமயே 
ரதகஜ துரகபதாதி ஸமாவ்றுத, பரிஜன மம்டித லோகனுதே | 
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித ஸேவித, தாப னிவாரிணி பாதயுதே 
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, கஜலக்ஷ்மீ ரூபேண பாலய மாம் || 4 ||
ஸம்தானலக்ஷ்மிஅயிகக வாஹினி மோஹினி சக்ரிணி, ராகவிவர்தினி ஜ்ஞானமயே 
குணகணவாரதி லோகஹிதைஷிணி, ஸப்தஸ்வர பூஷித கானனுதே |
ஸகல ஸுராஸுர தேவ முனீஶ்வர, மானவ வம்தித பாதயுதே 
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஸம்தானலக்ஷ்மீ பரிபாலய மாம் || 5 ||
விஜயலக்ஷ்மிஜய கமலாஸினி ஸத்கதி தாயினி, ஜ்ஞானவிகாஸினி கானமயே 
அனுதின மர்சித கும்கும தூஸர, பூஷித வாஸித வாத்யனுதே | 
கனகதராஸ்துதி வைபவ வம்தித, ஶம்கரதேஶிக மான்யபதே 
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, விஜயலக்ஷ்மீ பரிபாலய மாம் || 6 ||
வித்யாலக்ஷ்மிப்ரணத ஸுரேஶ்வரி பாரதி பார்கவி, ஶோகவினாஶினி ரத்னமயே 
மணிமய பூஷித கர்ணவிபூஷண, ஶாம்தி ஸமாவ்றுத ஹாஸ்யமுகே |
னவனிதி தாயினி கலிமலஹாரிணி, காமித பலப்ரத ஹஸ்தயுதே 
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, வித்யாலக்ஷ்மீ ஸதா பாலய மாம் || 7 ||
தனலக்ஷ்மிதிமிதிமி திம்திமி திம்திமி-திம்திமி, தும்துபி னாத ஸுபூர்ணமயே 
குமகும கும்கும கும்கும கும்கும, ஶம்க னினாத ஸுவாத்யனுதே |
வேத பூராணேதிஹாஸ ஸுபூஜித, வைதிக மார்க ப்ரதர்ஶயுதே 
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தனலக்ஷ்மி ரூபேணா பாலய மாம் || 8 ||
பலஶ்றுதிஶ்லோ|| அஷ்டலக்ஷ்மீ னமஸ்துப்யம் வரதே காமரூபிணி | 
விஷ்ணுவக்ஷஃ ஸ்தலா ரூடே பக்த மோக்ஷ ப்ரதாயினி ||
ஶ்லோ|| ஶம்க சக்ரகதாஹஸ்தே விஶ்வரூபிணிதே ஜயஃ |
ஜகன்மாத்ரே ச மோஹின்யை மம்களம் ஶுப மம்களம் ||



Wednesday, February 26, 2014

Govinda enbom - கோவிந்தா என்போம்

ராகம்: அஹீர் பைரவ் 

கோவிந்தா என்போம் கோபாலா என்போம்
ராம் ராம் என்போம் சாய் ராம் என்போம்

அல்லா கௌதம புத்தா என்போம்
சௌராஷ்டிரா மகாவீர இயேசு பிதா என்போம்

மதமென்னவானாலும் மனிதரும் ஒன்றே
பெயறேன்னவானாலும் அறம் பொருள் ஒன்றே

நம் தந்தை இறைவன் நாம் அவர் பிள்ளை
அவர் புகழ் பாடி பெரும் இன்பம் கோடி


Saturday, January 4, 2014

Thiruppavai 30 (Vangak Kadal Kadaintha) - திருப்பாவை 30 (வங்க கடல் கடைந்த)

இயற்றியவர்: ஆண்டாள் 


வங்க(க்) கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்க(ப்) பறை கொண்ட ஆற்றை அணி புதுவை(ப்)
பைங்கமல(த்) தண் தெரியல் பட்டார் பிரான் கோதை -
- சொன்ன சங்க(த்) தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்து(ச்) செல்வ(த்) திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


Thiruppavai 29 (Chitranchiru kale) - திருப்பாவை 29 (சிற்றம் சிறு காலே)

இயற்றியவர்: ஆண்டாள் 


சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குளத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களை(க்) கொள்ளாமல் போகாது
இற்றை(ப்) பறை கொள்வான் அன்று கான் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்



Thiruppavai 28 (Karavaigal Pin Sendru) - திருப்பாவை 28 (கறவைகள் பின் சென்று)

இயற்றியவர்: ஆண்டாள் 


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்(க்) குலத்து உந்தன்னை(ப்)
பிறவி பெறுந்தனை(ப்) புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய் 


Thiruppavai 27 (Koodarai Vellum Seer) - திருப்பாவை 27 (கூடாரை வெல்லும் சீர்)

இயற்றியவர்: ஆண்டாள் 


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னை(ப்)
பாடி(ப்) பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக(ச்)
சூடகமே தோல் வளையே தோடு செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வார(க்)
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்