ராகம்: பிருந்தாவனி
இயற்றியவர்: மகாகவி சுப்பரமண்ய பாரதியார்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
கணபதிராயன் அவனிரு காலைபிடித்திடுவோம்
குணமுயர்ந்திடவே விடுதலை குடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் )
சொல்லுக்கடங்காவே பராசக்தி சுரதனங்கள் எல்லாம்
வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழிஎன்றே துதிப்போம் (ஓம் சக்தி ஓம் )
வெற்றிவடிவேலன் அவன்னுடை வீரத்தினை புகழ்வோம்
சுற்றிநில்லதேபோ பகையே துள்ளிவருகுதுவேல் (ஓம் சக்தி)
தாமரைபூவினிலே சுருதியை தனி இருந்துரைபாள்
பூமநிதளினையே கண்ணிலொற்றி புண்ணியம் எய்திடுவோம் (ஓம் சக்தி)
பாம்பு தலை மேல நடம்செயும் பாதத்தினை புகழ்வோம்
மாம்பழ வாயினிலே குழலிசை வண்மய் புகழ்ந்திடுவோம் (ஓம் சக்தி )
செல்வத்திருமகளை திடம் கொண்டு சிந்தனை செய்திடுவோம்
செல்லவமெல்லாம் தருவாள் நமதோளி திக்கனைத்தும் பரவும் (ஓம் சக்தி)