Wednesday, September 14, 2011

Eppadi paadinaro - எப்படி பாடினாரோ


ராகம்: பீம்ப்ளாஸ்                                                   English Lyrics
இயற்றியவர் : சுத்தானந்த பாரதி 

எப்படி பாடினாரோ அடியார் 
அப்படிபாட நான் ஆசைகொண்டேன் சிவனே 
அப்பரும் சுந்தரரும் ஆளுடை பிள்ளையும் 
அருள்மணிவாசகரும் பொருளுணர்ந்து உன்னையே ||
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும் 
அருணகிரிநாதரும் அருட்ஜோதி வள்ளலும் 
கருணை கடல் பெருகி காதலினால் உருகி 
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் ||



Raghuvamsa sudha - ரக்ஹுவம்ச சுதா


ராகம் :  கதன குதூஹலம்                                             English Lyrics
இயற்றியவர் : பட்டணம் சுப்பிரமணிய ஐயர் 

ரக்ஹுவம்ச சுதாம்புதி  சந்திர ஸ்ரீ 
ராம  ராம  ராஜராஜேஸ்வர 

அகாமேகமாருத ஸ்ரீகர 
அசுரேஷம்ருகேன்ர  வர  ஜகன்னாத 

  ரி   ,   ரி   , ரி     ,     நி ,      , ஸா,
ஸா  நி         ,       ரி .
ஸ ரி  ரி          நி ,           ரி  ரி   
      ரி  ரி    ஸா  நி , நி              ரி  ||

ஜமதக்நிஜ   கர்வ  கண்டன 
ஜெயருட்ராடி  விச்மித  பண்டன 
கமலாப்தான்வய  மண்டன 
அகநிதட்புத    சௌர்யா  ஸ்ரீ  வெங்கடேஷ .

  ரி   ,   ரி   , ரி     ,     நி ,      , ஸா,
ஸா  நி         ,       ரி .
ஸ ரி  ரி          நி ,           ரி  ரி   
      ரி  ரி    ஸா  நி , நி              ரி  ||


                                                                     Traditional


                                                                     Fusion - Nice one


Marukelara - மருகேலரா



ராகம்: ஜெயந்தஸ்ரீ 
இயற்றியவர்: தியாகராஜர்                                 English lyrics                      

மருகேலரா ஓராகவா மருகேலரா ஓராகவா
மருகேலசர  சரரூப
பராத்பர சூர்யா சுரகரலோச்சனா ||

அன்னிநிவ  நூசு அந்தரங்க முன 
தினகாவே ராகி தெலுசு குண்டினையா 
நிநேகானி  மதி நிநேஜாள   
நோருள நனுப்ரோவவைய த்யகரஜனுத ||



Ennakavi padinalum - என்னகவி பாடினாலும்


ராகம் : நீலாம்பரி                                                   
இயற்றியவர் : அணயப்பட்டி ஆதிசேஷையர்  

என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை 
இன்னும் என்ன சோதனையா முருகா 

அன்னையும் அறியவில்லை 
தந்தையோ நினைப்பதில்லை 
உன் மாமியும் பார்பதில்லை 
மாமனோ கேட்பதில்லை (லக்குமி மாமியோ) ||

அட்சர லக்ஷம் தந்த அன்னல்போஜராஜன் இல்லை 
என்னை பட்சமுடனே அழைத்து பரிசளிக்க யாருமில்லை
ஈஜகத்தில் நீநினைந்தால் எனக்கோர் குறைவில்லை 
லட்சியமோ உனுக்கு உன்னை நான் விடுவதில்லை (அலட்சியமோ உன்னக்கு) ||



Nambikettavar - நம்பிக்கெட்டவர்


ராகம்: ஹிந்தோளம்                                         English Lyrics
இயற்றியவர் : பாபநாசம் சிவன் 

நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை ||
உமை நாயகனை திருமயிலையின் இறைவனை ||

அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
அன்பர் மனம் கவர் சம்புகபாளியை ||

ஒன்றுமே பயனில்லை என்று 
உணர்தபின் பலனுண்டேன்பார் 
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் 
இந்நிலை எய்துவதுருதி  இதை மறந்தார் 
அன்று செயலழிந்தல  மறு பொழுது
சிவன் பெயர் நாவில் வாறதே 
ஆதலினால் மனமே இன்றே 
சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்) ||



Amba nee irangaa - நீ இறங்கா எனில்



ராகம்: அடானா                                                                         
இயற்றியவர் : பாபநாசம் சிவன் 

நீ இறங்கா எனில் புகலேது அம்ப ||
அம்பநிகிலஜகன் நாதன் மார்பில் உறைதிரு || 

தாயிறங்காவிடில் செய்யுரிர் வாழுமோ 
கல உலகிற்கும் நீ தாயல்லவோ (அம்பனி)

பாற்கடலில் உதித்த திருமணியே 
சௌவ்பாக்ஹ்யலக்ஷ்மி என்னை கடைகனியே 
நாற்கவியும் பொழியும் குலவோர்வோற்கும்
மெய் ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் (அம்பனி)





Naan oru vilayattu bommaiya - நானொரு விளையாட்டு போம்மையா


ராகம்: நவரச கானடா 
இயற்றியவர் : பாபநாசம் சிவன் 

நானொரு விளையாட்டு போம்மையா
ஜகன்நாயகியே உமையே உந்தன்னுக்கு (நானொரு)

நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடினது போதாதா (தேவி)
( உந்தனுக்கு நானொரு )

அருளமுதை பருக அம்மா அம்மா 
என்று அலறுவதை கேட்க ஆனந்தமா 
ஒரு புகலின்றி உன்  திருவடி அடைந்தேனே 
திருஉள்ளம் இறங்காத தேவி 
( உந்தனுக்கு நானொரு )