ராகம்: மத்யமாவதி
இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ )
உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து
அசைந்து ஆடுதே எனவே (ஆடாது)
ஆடலை காண (கண்ணா உன் )
தில்லை அம்பலத்து இறைவனும்
தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார்
ஆதலினால் சிறு யாதவனே
ஒரு மா மயிலிறகனி மாதவனே நீ ( ஆடாது )
சின்னஞ்சிறு பதங்கள் சிலம்போளிதிடுமே
அதை செவி மடுத்த பிறவி மனம்களிதிடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே
மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே
பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று (2 )
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளிதிடுமே
குழல் ஆடிவரும் அழகா உனை
காணவரும் அடியார் எவராயினும்
கனக மணி அசையும் உனது திருநடனம்
கண்பட்டு போனால் மனம் புண்பட்டுபோகுமே (ஆடாது)
you tube links not working
ReplyDeleteநன்றி
ReplyDelete