ராகம்: ஸ்ரீ ரஞ்சினி 
இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 
நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும் (கண்ணனை) 
எங்கள் நீல நிரமேனி மாதவன் செய்வது 
நிமிஷங்கள் போவது யுகமாய் ஆகுது ||
காதார குழலூதி கன்றோடு விளையாடி
கண்முன்னே வந்து நின்று ஆட்டமும் ஆடி 
ஏதொதே ஜாலங்கள் செய்வதும் ஓடி ஓடி 
எழிலுறும் மங்கையர் மனதினில் புகுந்து 
களவாடிடும் எனதாருயிர் மகனை ||
செய்யும் துஷ்ட தனத்திற்கோர் எல்லையே இல்லை
தேடிப்பிடிக்க என்னால் சக்தியும் இல்லை 
கையும் களவும்மாக காலமும் வல்லை 
ஆனால் காலம் தவறாது கொள் சொல்ல வந்துநின்ற 
மாதர்க்கு விடை சொல்ல நேரமும் இல்லை ||
 
சிறு தவறுகள் உள்ளன. உதாரணம் - நீலநிறமேனி என்பதே சரி, கோள் சொல்ல வந்த, ஏதேதோ ஜாலங்கள்.
ReplyDelete