ராகம் : கானடா
இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில் ||
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளிதர
என் மனமிக அலைபாயுதே கண்ணா ||
தெளிந்த நிலவு பட்ட பகல்போல் எரியுதே உன்
திக்கை நோக்கி என் (இரு)புருவம் நெலியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கதித்த வனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு கதித்த மனதில் அனைத்தும்
எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த வா
அலைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலென கலிக்கவா
கதரிமானம் உருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ கழிக்கவோ
இது தகுமோ இது முறையோ
இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுதில் ஆடிடும்
குழைகல்போலவே மனது வேதனை மிக உறும் ||
Very nice idea Songs with lyrics
ReplyDelete