ராகம் : மோகனம்
இயற்றியவர்: அருணாச்சல கவிராயர்
ஏன் பள்ளிகொண்டீர் அய்யா ஸ்ரீ ரங்கநாதா
ஆம்பல் பூத்தசய பருவதமடுவிலே
அவதரித்த இரண்டு ஆற்றின்நடுவிலே ||
கௌசிகன் சொல் குறிததற்கோ
அரக்கி குலையில் அம்பு தேறிததற்கோ
ஈசன் வில்லை முரிததற்கோ
பரசுராமன் முரம் பறிததற்கோ ||
மாசிலாத மிதிலேசன் பெண்ணுன்னுடன் வழிநடந்த இலைப்போ
துசில்லாத குகன்னோடதிலே கங்கை துறை கடந்த இலைப்போ
திசுரமாம் சித்ரா கூட சிகரம் தனில் திசை நடந்த இலைப்போ
கசினிலே மாரிசன் ஓடிய கதி தொடர்ந்த இலைப்போ
ஓடி கலைதோ தேவியை தேடி இளைத்தோ
அரங்கள் ஏழும் துளைத்தோ கடலை கட்டி வளைத்தோ
இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ
ராவணாதிகளை அடித்த வருத்தமோ ||
மதுரையிலே வரும் கலையோ முதலைவாய் மகனை தரும் கலையோ
எதிர் எருதை போரும் கலையோ கன்றை எடுத்தேரிந்த பெரும் கலையோ
புதுவையான முலையுண்டு பேயினுயிர் போக்கியளிர்தீரோ
அதிர ஓடிவரும் குருவிவாயை இரண்டாகியளிர்தீரோ
துதிசை ஆயர்களை காக்கவேண்டி மலை தூக்கி அளிர்தீரோ
கதிசை காலினால் காளிங்கன் மணிமுடி தாக்கியளிர்தீரோ
மருதம் சாய்த்தோ ஆடுமாடுகள் மேய்தோ
சகடுருளை தெய்தோ கம்சன் உயிரை மாய்த்தோ
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர்விடுத்த வருத்தமோ
போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ ||
No comments:
Post a Comment