Thursday, September 26, 2013

Aarumo aaval - ஆறுமோ ஆவல்


ராகம்:  மாண்டு
இயற்றியவர்: கண்ணன் ஐயங்கார் 


ஆறுமோ ஆவல் ஆறுமுகனை நேரில் காணாது

ஏறுமயில் ஏறி குன்றுதோறும் நின்றாடியவன்
பெரும்புகழும் தெரிந்தும்மவன் பேரழகை பருகாமல் ||

ஞானகுருபரன் தீனர்க்கருள் குகன்
வானவரும் தொழும்  ஆனந்த வைபோஹன்

காணகிடைகமுன் கூறுதற்கில்லாமல்
அற்புத தரிசனம் கற்பனை செய்தால் மட்டும் ||



காண கண்ணாயிரம் வேண்டும்

ராகம்:  கர்நாடக தேவகாந்தரி 
இயற்றியவர் : அருளவன் 

விருத்தம்:
சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ
பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர் அணிந்து 
தங்கரத தேரினிலே பக்தர்ப்படை சூழ்ந்துவர 
வள்ளி தெய்வயானையுடன் காட்சிதரும் 

உன்னழகை காண ஆயிரம் காணவேண்டும் 
முருகனை காண  கண்ணாயிரம் வேண்டும் 
முருகனை காண ஆயிரம் காணவேண்டும் 
வேலணை காண கந்தனை காண குமரனை 
காண ஆயிரம் காணவேண்டும் 

உலகலந்த வல்லவனை வண்ண மயில் வாகனை 
கணபதி சோதரனை தந்தைஸ்வாமி ஆனவனை || (காண)

சரவணை காண சிவகுமரனை காண ஆயிரம் காணவேண்டும் 
செங்கதிரும் முழுமதியும் செர்ந்தணிந்த சுந்தரனை 
விண்கமும் மண்ணகமும் காத்துநிற்கும் அருளகனை ||

முருகனை காண ஷண்முகனை காண 
வேலணை காண சிவபாலனை காண 
ஆறுமுகனை காண கந்தனை காண
குகனை காண கடம்பனை காண  
குருபரனை காண கார்த்திகேயனை காண 
மயில்வாகனை காண பழனி வேலணை காண
உன்னை கானா கண் ஆயிரம் வேண்டும் முருகா 



Dheena karunakarane - தீனா கருணாகரனே

ராகம்:  குந்தளவராலி 
இயற்றியவர்: பாபநாசம் சிவன் 

தீன கருணாகரனே நடராஜா  நீலகண்டனே 
நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இறங்கி அருளும் 
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே ||

மீனலோசனி மணாளா 
தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே 
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே ||

ஆதியந்தம் இல்லா ஹரனே 
அன்பர் உள்ளம் வாழும் பரனே 
பாதி மதிவேணியனே பரமேஷ நீலகண்டனே ||




Srinivasa Thiruvenkatamudayan - ஸ்ரீனிவாச திருவேங்கடமுடையாய்

ராகம்: ஹம்ஸாநந்தி
இயற்றியவர்: பாபநாசம் சிவன் 

விருத்தம்:
செடியாய வள்வினைகள் தீர்க்கும் திருமாலே 
நெடியாலே வேங்கடவா நின் கோவிலின் வாசல் 
அடியாரும் வானவரும் அறம் பயறும் 
கிடந்தியங்கும் படியை கிடந்தது உன் பவழ வாய் காண்பேனே 
 ==

ஸ்ரீனிவாச திருவேங்கடமுடையாய் 
ஜெய கோவிந்தா முகுந்த அனந்த ||
தீன சரண்யான் எனும் புகழ் கொண்டாய் 
தீனன் எனைப்போல் வேறேவன் கண்டாய் ||
ஜகம்புகழும் ஏழுமலை மாயவனே 
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே 
ஜன்னாதா சங்கு சக்ரதரனே (நின்)
திருவடிக்கபாயம் அபாயம் அய்யா ||


Thathvamariya tharama - தத்வமரிய தரமா

ராகம்: ரீதிகௌள 
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
  
தத்வமரிய தரமா நின் 
மூலாதார கணபதே சுரபதே நினது ||

சத்வகுமும் ஜீவதயையும் ஞானமும் 
சற்றுமில்லாத கிராதகனுக்கு உனது || 

மதுர பரிபூர்ண மோதக கரனே 
மகா  விக்ன  வண கூடாரவரனே   
நிதியோன்பதும்  அன்பர்க்கருள்  பரனே
 
நிகில சராசர பிஜா குசனே
மதிசேகரன் மகனே சுமுகனே 
மதவாரன முகனே 
ஸ்ருதி முடிவுனர் வரும் சித்பரனே 
குகசோதரனே ராமதாசனே
   ||



Idathu patham thooki aadum - இடதுபதம் தூக்கி ஆடும்

ராகம்: கமாஸ் 
இயற்றியவர் : பாபநாசம் சிவன்


இடதுபதம் தூக்கி ஆடும் 
நடராஜனடி பணிமையே நெஞ்சே  

படவரவாட புவியதலாட பக்தர்கள் ஜெய ஜெய எனவே 
புலி பதஞ்சலி இரு கண் குளிர தில்லையிலே || 

திருவடிச்சிலம்புகள் கலீர் கலீரென  
திருமுடி இல மதி ஒலி பளீர் பளீரென 
திமிதக தரிகிடதோம்  என திருமால் மத்தளம் அதிர 
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே 
புன்னகையோடிடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி ||


Kaa vaa vaa - கா வா வா

ராகம்: வராலி
இயற்றியவர் : பாபநாசம் சிவன்

கா வா வா கந்தா வா வா
என்னை காவா வேலவா 
முருகா வா வா கந்தா வா வா
என்னை காவா வேலவா 
ஷண்முகா வா வா கந்தா வா வா 
என்னை காவா வேலவா 
பழனிமலை உறையும் முருகா வா வா 
கந்தா வா வா என்னை காவா வேலவா 

தேவாதிதேவன் மகனே வா 
பரதேவி மடியில் அமரும் குகனே வா
வள்ளி தெய்வயானை மணவாளா வா 
சரவணபவ பரம தயாளா வா 

ஷண்முகா வா வா கந்த வா வா 
என்னை காவா வேலவா 
பழனிமலை உறையும் முருகா வா வா
கந்தா வா வா என்னை காவா வேலவா 

ஆபத்திருளர அருளொளி தரும் 
அப்பனே அண்ணலே அய்யா வா 
பவத்திரல்தரும் தாபமகல வரும்
பழனி வளர் கருணை மழையே வா
தாபத்ரய வெயிலற நிழல் தருவாய் 
தருவே என் குலகுருவே வா
ஸ்ரீ பத்மநாபன் மருகா வா 
ராம தாசன் வணங்கும் முத்தையா விரைவோடு 

கா வா வா கந்தா வா வா என்னை கா வா வேலவா
முருகா வா வா ஷண்முகா வா வா
என்னை காவா வேலவா 



Karpagame kanpaaraai - கற்பகமே கண்பாராய்

ராகம்: மத்யமாவதி 
இயற்றியவர் : பாபநாசம் சிவன் 

கற்பகமே கண்பாராய் கடை கண்பாராய் 
திருமயிலை கற்பகமே கருணை கண்பாராய் 
சிற்பர யோகியர் சித்தர்கள் ஞானியர் 
திருவுடை அடியவர் கருதும் வரமுதவும் 
திருமகளும் கலைமகளும் பரவும் திருமயிலை || 

சத்திசிதானந்த மதாய் சகல உயிர்க்குயராயவள் நீ 
ஆயவள் 
ததுவமத்ச்யாதி மகாவாக்கிய தத் பரவஸ்துவும்  நீ 
சத்துவகுணமோடு பாக்திசை பவர்பவ 
தாபமும் பாபமும் மறையும் மயில்ல்வர
சந்தான சௌபாக்ய சம்பத்துத்தோடு
மறுமையில் இறகுசெயலின் இன்பமோடு இன்மையில் தர (சந்தான) 


Kaliyuga varadan - கலியுக வரதன்


ராகம்: பிருந்தாவன  சாரங்க     
இயற்றியவர் : பெரியசாமி தூரன் 

கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் 
காட்சியளிப்பது பழனியிலே ||

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன் 
மரகத வண்ணனாம் திருமால் மருகன் ||

கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தான் 
கார்த்திகை பெண்டீர்கள் அணைப்பில் வளர்ந்தான் 
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தான் 
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தான் ||



Enna Thavam Seithanai - என்ன தவம் செய்தனை

ராகம்: காபி 
இயற்றியவர்: பாபநாசம் சிவன் 

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க ||

ஈரேழு புவனங்கள் படைத்தவனை 
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட நீ ||

சனகாதியர் தவயோகம் செய்து வருந்தி சாதீத்ததை 
புனிதமாதே எளிதில் பெற ||

பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள 

உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை ||