ராகம்: பிருந்தாவன  சாரங்க      
இயற்றியவர் : பெரியசாமி தூரன் 
கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் 
காட்சியளிப்பது பழனியிலே ||
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன் 
மரகத வண்ணனாம் திருமால் மருகன் ||
கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தான் 
கார்த்திகை பெண்டீர்கள் அணைப்பில் வளர்ந்தான் 
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தான் 
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தான் || 
சிறப்பு. ஓம் குமராய போற்றி!
ReplyDeleteVery nice song. Thanks for uploading. Om muruga saravanabhava 🙏
ReplyDelete