ராகம்: கர்நாடக தேவகாந்தரி
இயற்றியவர் : அருளவன்
விருத்தம்:
சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ
பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர் அணிந்து
தங்கரத தேரினிலே பக்தர்ப்படை சூழ்ந்துவர
வள்ளி தெய்வயானையுடன் காட்சிதரும்
உன்னழகை காண ஆயிரம் காணவேண்டும்
முருகனை காண கண்ணாயிரம் வேண்டும்
முருகனை காண ஆயிரம் காணவேண்டும்
வேலணை காண கந்தனை காண குமரனை
காண ஆயிரம்
காணவேண்டும்
உலகலந்த வல்லவனை வண்ண மயில் வாகனை
கணபதி சோதரனை தந்தைஸ்வாமி ஆனவனை || (காண)
சரவணை காண சிவகுமரனை காண ஆயிரம் காணவேண்டும்
செங்கதிரும் முழுமதியும் செர்ந்தணிந்த சுந்தரனை
விண்ணகமும் மண்ணகமும் காத்துநிற்கும் அருளகனை ||
முருகனை காண ஷண்முகனை காண
வேலணை காண சிவபாலனை காண
ஆறுமுகனை காண கந்தனை காண
குகனை காண கடம்பனை காண
குருபரனை காண கார்த்திகேயனை காண
மயில்வாகனை காண பழனி
வேலணை காண
உன்னை கானா கண் ஆயிரம் வேண்டும் முருகா
No comments:
Post a Comment