Thursday, September 26, 2013

Chinnanchiru Kiliyae - சின்னஞ்சிறு கிளியே

ராகம்: மோகன கல்யாணி 
இயற்றியவர் : மகாகவி சுப்ரமண்ய பாரதி 

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வகளஞ்சியமே 
என்னை கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரியவந்தாய் 
பிள்ளைக்கனி அமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே 
அள்ளி அனைதிடவே    என்முன்னே ஆடிவரும் தேனே || 

ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி 
ஆடித்திரிதல் கண்டால் உன்னைபோய் ஆவிதழுவுதடி 
உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கிவளருதடி 
மெச்சி உனை ஊரார் புகந்தால் மேனிசிளிற்குதடி 
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறிகொள்ளுதடி 
உன்னைதழுவிடிலோர் கண்ணம்மா உன்மத்தமாகுதடி 
உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி 
என்கண்ணீல் பாவைஅன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ 




No comments:

Post a Comment