ராகம்: ராகமாலிகா 
இயற்றியவர்: மகாகவி சுப்ரமண்ய பாரதி 
ஆசை முகம் மறந்து போச்சே இதை 
யாரிடம் சொல்வேன் அடி தோழி 
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் 
நினைவு முகம் மறக்கலாமோ ||
கண்ணில் தெரியுதொரு
தோற்றம் அதில்
கண்ணன் அழகுமுழுதில்லை 
நன்னு முகவடிவு கானில் அந்த 
நல்லமலர் சிரிப்பை காணோம் ||
தேனை மறந்திருக்கும் வண்டும் 
ஒளிச்சிறப்பை  மறந்துவிட்ட பூவும் 
வானை மறந்திருக்கும் பயிரும்  
இந்த வையம்முழுதும் இல்லை தோழி ||
கண்ணன் முகம் மறந்து போனால் 
இந்த கண்கள் இருந்தும் பயனுண்டோ 
வண்ணபடமும் இல்லை கண்டால் 
இனி வாழும் வழி என்னடி தோழி  ||
 
Name the ragams in this ragamalika
ReplyDelete