ராகம்: கமாஸ் 
இயற்றியவர்
: பாபநாசம் சிவன்
இடதுபதம் தூக்கி ஆடும் 
நடராஜனடி பணிமையே நெஞ்சே  
படவரவாட புவியதலாட பக்தர்கள் ஜெய ஜெய எனவே 
புலி பதஞ்சலி இரு கண்
குளிர தில்லையிலே || 
திருவடிச்சிலம்புகள் கலீர் கலீரென  
திருமுடி இல மதி ஒலி பளீர் பளீரென 
திமிதக தரிகிடதோம்  என திருமால் மத்தளம்
அதிர 
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே 
புன்னகையோடிடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி ||
 
ஆடல் அரசனைப் பணிந்திடு எனத் தன் நெஞ்சிற்குச் சொன்னது.ஆகா அருமை!
ReplyDelete