Tuesday, March 8, 2011

Thaye Yashoda - தாயே யேசோத


ராகம் : தோடி 
இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 

தாயே யேசோத உன்தன் ஆயர்குலத்துதித்த 
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி 

தையலே கேளடி உன்தன் பையனை போலவே 
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை 

காலினில் சிலம்பு கொஞ்ச (கண்ணன்) 
கைவளை குலுங்க முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான் 
வானோர்களெல்லாம் மகிழ மானிடர் எல்லாம் புகழ நீலவண்ண கண்ணன் இவன் நர்த்தமாடினான்

பாலன் என்று தவி அணைத்தேன் அடி யேசோத 
அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முதம்மிட்டாண்டி 

பாலனல்லடி உன்மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம் 
நாலு பேர்கள் கேட்டசொல்ல நாணமிகவாகுதடி 

முந்தாநாளந்தின்  நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து 
விந்தைகள் அநேகம் செய்து விளையாடினான் 
பந்தலவாயில் வெண்ணை தந்தாள் தான் விடுவேனென்று 
முன்துகிலை தொட்டிழுத்து போராடினான் 
அந்த வாசுதேவன் இவன் தான்( அடி யேசோதா )
மைதான் என்று எடுத்தனைத்து மடிமேல் வைத்து 
சுந்தரமுகத்தை பார்க்கும் வேளையிலே வாய்திறந்து
 இந்திரஜாலம்   போலவே ஏழுலகம் காண்பித்தான் (தாயே) 





Palvadiyum Mugam - பால்வடியும் முகம்


ராகம்: நாட்ட குறுஞ்சி 
இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர்                

பால்வடியும் முகம் நினைந்து
நினைந்து உள்ளம் பரவசம் மிக வாகுதே 

நீலக்கடல் போலுன் நிறத்தழகா கண்ணா 
எந்தன் நெஞ்சம் குடி கொண்டு 
அன்று முதல் என்றும் சிந்தனை செய்யதொழிய (பால்வடியும்)

வானமுகத்தில் சட்று  மனம் வந்து நோகினும்
மோன முகம் வந்து தோணுதே 
தெளிவான தண்ணீர் தடத்தில் சிரித்த முகம் வந்து காணுதே 
கான குயில் குரலில் கருத்தமைந்திடினும் 
கான குழலோசை மயக்குதே 

கருத குழலோடு நிறுத்த மயிலிரகிருக்கி  அமைத்த திரத்திலே
கான மயிலாடும் மோன குயில்பாடும் நீல நதி ஓடும் வனத்திலே
குழல் முதல் எழில் இசை குழைய வரும்
இசையின் குழலோடு மிளிரில கரத்திலே 
கதிருமதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே 
காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே 
ஏன் மனதை இறுதி கனவி நனவினோடு பிறவி
பிறவி தோறும் கனித்துருக வரம் தருக (பால்வடியும்)