Friday, November 29, 2013

Valli Kanavan perai - வள்ளிக்கணவன் பேரை

    
ராகம்: செஞ்சுருட்டி    

வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் 
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே 

மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே 
குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி 

கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம் 
வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி 

எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்   
குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி கிளியே 




மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும் 
ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே 

கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே 
விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி ||


Eppo varuvaro - எப்போ வருவாரோ

ராகம் : ஜோன்புரி 
இயற்றியவர் : கோபாலக்ருஷ்ண   பாரதியார் 

எப்போ வருவாரோ எந்தன்கலி  தீர 
அப்பர் முதல் மூவரும் ஆளுடை அடிகளும் 
செப்பிய தில்லை சிதம்பரநாதன் ||

நற்பருவம் வந்து நாதனை தேடும் 
கற்பனைகள் முற்ற காட்சி தந்தால் ||

அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன் 
போற்பதத்தை காணேன் பொன்னம்பலவாணன் 
(கோ)பாலக்ருஷ்ணன் போற்றி பணிந்திடும் ஈசன் மேலே 
காதல் கொண்டேன் வெளிப்படக்கானேன் ||