Wednesday, February 26, 2014

Govinda enbom - கோவிந்தா என்போம்

ராகம்: அஹீர் பைரவ் 

கோவிந்தா என்போம் கோபாலா என்போம்
ராம் ராம் என்போம் சாய் ராம் என்போம்

அல்லா கௌதம புத்தா என்போம்
சௌராஷ்டிரா மகாவீர இயேசு பிதா என்போம்

மதமென்னவானாலும் மனிதரும் ஒன்றே
பெயறேன்னவானாலும் அறம் பொருள் ஒன்றே

நம் தந்தை இறைவன் நாம் அவர் பிள்ளை
அவர் புகழ் பாடி பெரும் இன்பம் கோடி


Saturday, January 4, 2014

Thiruppavai 30 (Vangak Kadal Kadaintha) - திருப்பாவை 30 (வங்க கடல் கடைந்த)

இயற்றியவர்: ஆண்டாள் 


வங்க(க்) கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்க(ப்) பறை கொண்ட ஆற்றை அணி புதுவை(ப்)
பைங்கமல(த்) தண் தெரியல் பட்டார் பிரான் கோதை -
- சொன்ன சங்க(த்) தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்து(ச்) செல்வ(த்) திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


Thiruppavai 29 (Chitranchiru kale) - திருப்பாவை 29 (சிற்றம் சிறு காலே)

இயற்றியவர்: ஆண்டாள் 


சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குளத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களை(க்) கொள்ளாமல் போகாது
இற்றை(ப்) பறை கொள்வான் அன்று கான் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்



Thiruppavai 28 (Karavaigal Pin Sendru) - திருப்பாவை 28 (கறவைகள் பின் சென்று)

இயற்றியவர்: ஆண்டாள் 


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்(க்) குலத்து உந்தன்னை(ப்)
பிறவி பெறுந்தனை(ப்) புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய் 


Thiruppavai 27 (Koodarai Vellum Seer) - திருப்பாவை 27 (கூடாரை வெல்லும் சீர்)

இயற்றியவர்: ஆண்டாள் 


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னை(ப்)
பாடி(ப்) பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக(ச்)
சூடகமே தோல் வளையே தோடு செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வார(க்)
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் 



Thiruppavai 26 (Maale Manivaana) - திருப்பாவை 26 (மாலே மணிவண்ணா)

இயற்றியவர்: ஆண்டாள் 


மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்(ப்) பாடுடையனவே
சால(ப்) பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் 





Thiruppavai 25 (Oruthimaganai Piranthu) - திருப்பாவை 25 (ஒருத்தி மகனாய் பிறந்து)

இயற்றியவர்: ஆண்டாள் 


ஒருத்தி மகனாய்(ப்) பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர(த்)
தரிக்கிலான் ஆகி(த்) தான் தீங்கு நினைந்த
கருத்தை(ப்) பிழைப்பித்து(க்) கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் 


Thiruppavai 24 (Andrivvulagam Alanthai) - திருப்பாவை 24 (அன்று இவ்வுலகம் அளந்தாய்)

இயற்றியவர்: ஆண்டாள் 


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்கு(த்) தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்ற(ச்) சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே எத்தி(ப்) பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்




Thiruppavai 23 (Maarimalai Muzhanjil) - திருப்பாவை 23 (மாறி மலை முழைஞ்சில்)

இயற்றியவர்: ஆண்டாள் 

மாறி மலை முழைஞ்சில் மன்னி(க்) கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று(த்) தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கி(ப்) புறப்பட்டு(ப்)
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி(க்) கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் 




Thiruppavai 22 (Anganma Gyalathu) - திருப்பாவை 22 (அங்கண் மா ஞாலத்து)

இயற்றியவர்: ஆண்டாள் 


அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளி(க்) கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்(ச்) செய்த தாமரை(ப்) பூ(ப்) போலே
செங்கண் சிறு(ச்) சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் 


Thiruppavai 21 (Yetra Kalangal) - திருப்பாவை 21 (ஏற்ற கலங்கள்)

இயற்றியவர்: ஆண்டாள் 


ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்ற(ப்) படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்