ராகம் : ஷண்முகப்ப்ரியா
இயற்றியவர் : பாபநாசம் சிவன்
சரவணாபவ என்னும் திருமந்திரம் தனை
சதா ஜபி (ஓம்) என் நாவே
புரமெரித்த பரமன் நெற்றிக்கண்ணில் உதித்த
போதஸ்வருபன் போற்பாதம்தனை பணிந்து (சரவணபவ )
மண்ணிசை கிடந்துழல் பிறவி பிணியை தீர்க்கும்
மாயை அகலபெய் இன்பநேரியை சேர்க்கும்
தண்மதி நிடற்குழல் கருனைநிலவ வேண்டும்
ஷண்முகப்ரிய சடக்ஷற பாவன (சரவணபவ)