Showing posts with label Abhogi. Show all posts
Showing posts with label Abhogi. Show all posts

Monday, March 5, 2012

Sabhapathikku verutheivam - சபா பதிக்கு வேறுதெய்வம்


ராகம் - ஆபோகி 
இயற்றியவர் - கோபாலக்ருஷ்ண பாரதியார் 

ஆ - ஸ ரி க ம  த ஸ்
அ - ஸ் த ம  க ரி ஸ 

சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா தில்லை ||
 கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த தரணி தனில் 
 ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே 
பரகதிக்கு(பெற) வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா 
அரியர் புலவர் மூவர் பதம் அடைந்தார் என்றது புராணம் 
அறிந்து சொல்ல கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை ||