Showing posts with label SriRanjini. Show all posts
Showing posts with label SriRanjini. Show all posts

Thursday, September 26, 2013

Enna Thavam Seithanai - என்ன தவம் செய்தனை

ராகம்: காபி 
இயற்றியவர்: பாபநாசம் சிவன் 

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க ||

ஈரேழு புவனங்கள் படைத்தவனை 
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட நீ ||

சனகாதியர் தவயோகம் செய்து வருந்தி சாதீத்ததை 
புனிதமாதே எளிதில் பெற ||

பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள 

உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை ||




Tuesday, April 5, 2011

Nee than Mechi kolla vendum - நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்


ராகம்: ஸ்ரீ ரஞ்சினி 

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 



நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும் (கண்ணனை) 
எங்கள் நீல நிரமேனி மாதவன் செய்வது 
நிமிஷங்கள் போவது யுகமாய் ஆகுது ||

காதார குழலூதி கன்றோடு விளையாடி 
கண்முன்னே வந்து நின்று ஆட்டமும் ஆடி 
ஏதொதே ஜாலங்கள் செய்வதும் ஓடி ஓடி 
எழிலுறும் மங்கையர் மனதினில் புகுந்து 
களவாடிடும் எனதாருயிர் மகனை ||

செய்யும் துஷ்ட தனத்திற்கோர் எல்லையே  இல்லை 
தேடிப்பிடிக்க என்னால் சக்தியும் இல்லை 
கையும் களவும்மாக காலமும் வல்லை 
ஆனால் காலம் தவறாது கொள் சொல்ல வந்துநின்ற 
மாதர்க்கு விடை சொல்ல நேரமும் இல்லை ||