Showing posts with label Sindhubhairavi. Show all posts
Showing posts with label Sindhubhairavi. Show all posts

Monday, August 27, 2012

Chinnanchiru Pen Pole - சின்னஞ்சிறு பெண்போலே


ராகம்: சிந்துபைரவி 
இயற்றியவர் : உளுந்தூர்பேட்டை சண்முகம் 

சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி
சீவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள் 
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது 
பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது ||
மின்னலைப்போல் மேனி அன்னை சிவாகாமி 
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமேல்லாம் நிறைவாள் 
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள் 
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் ||


Wednesday, April 18, 2012

Thalaivaari poochoodi unnai - தலைவாரிப் பூச்சூடி உன்னை


ராகம்: சிந்துபைரவி
இயற்றியவர்: பாரதிதாசன்

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட 

சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை 

சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ 

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் 

விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி 

வேளைதோறும் கற்று வருவதால் படியும்

மலைவாழை அல்லவோ கல்வி? - நீ 

வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!  ||



படியாத பெண்ணாய் இருந்தால், - கேலி 

பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்

கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என் 

கண்ணல்ல, அண்டை வீட்டுப் பெண்களோடு

கடிதாய் இருக்கும் இப்போது - கல்வி 

கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது!  ||

Tuesday, April 5, 2011

Kaatrinile varum geetham - காற்றினிலே வரும் கீதம்


ராகம்: சிந்துபைரவி 

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 


காற்றினிலே வரும் கீதம் 
கண்கள் பணித்திட பொங்கும் கீதம் 
கல்லும் கனியும் கீதம் 
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் 
பண்ணொளி கொஞ்சிடும் கீதம்

காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் 

மதுர மோகன கீதம் 
நெஞ்சினிலே இன்ப தனலை எழுப்பி 

நினைவு அளிக்கும் கீதம் 


சுனை வண்டுடன் சோலை குயிலும் மனம் குவிந்திடவும் 
வானவேலிதனில் காரகனங்கள் கலங்கி நின்றிடையும்    
ஆஎன் சோல்வேன் மாயப்பிள்ளை வெங்குழல் பொழி கீதம் ||

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் ஊலாவிடும் நதியில் 
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான் 
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ ன் உள்ளம் ||