ராகம்: குந்தளவராலி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இறங்கி அருளும்
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே ||
மீனலோசனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே ||
ஆதியந்தம் இல்லா ஹரனே
அன்பர் உள்ளம் வாழும் பரனே
பாதி மதிவேணியனே பரமேஷ நீலகண்டனே ||