Thursday, January 12, 2012

Om shakthi Om - ஓம் சக்தி ஓம்

ராகம்:  பிருந்தாவனி 
இயற்றியவர்: மகாகவி சுப்பரமண்ய பாரதியார் 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி  ஓம் சக்தி ஓம் 

கணபதிராயன் அவனிரு காலைபிடித்திடுவோம்
குணமுயர்ந்திடவே விடுதலை குடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் )

சொல்லுக்கடங்காவே பராசக்தி சுரதனங்கள் எல்லாம் 
வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழிஎன்றே துதிப்போம் (ஓம் சக்தி ஓம் )
வெற்றிவடிவேலன் அவன்னுடை வீரத்தினை புகழ்வோம் 
சுற்றிநில்லதேபோ  பகையே துள்ளிவருகுதுவேல் (ஓம் சக்தி)

தாமரைபூவினிலே  சுருதியை தனி இருந்துரைபாள்
பூமநிதளினையே கண்ணிலொற்றி  புண்ணியம் எய்திடுவோம் (ஓம் சக்தி)

பாம்பு தலை மேல நடம்செயும் பாதத்தினை புகழ்வோம் 
மாம்பழ வாயினிலே குழலிசை வண்மய் புகழ்ந்திடுவோம் (ஓம் சக்தி )

செல்வத்திருமகளை திடம் கொண்டு சிந்தனை செய்திடுவோம் 
செல்லவமெல்லாம் தருவாள் நமதோளி திக்கனைத்தும் பரவும் (ஓம் சக்தி)



10 comments:

  1. குறில், நெடில் பிழைகள், ஒற்றுப்பிழைகள் எனப் பிழைகள் மண்டிக்கிடக்கின்றன. திருத்தி வெளியிடவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

    ReplyDelete
  2. ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் -பராசக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
    ஓம்சக்தி ஓம்சக்தி- ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

    1.கணபதிராயன் -அவனிரு
    காலைப் பிடித்திடுவோம்
    குணமு யர்ந்திடவே-விடுதலை
    கூடி மகிழ்ந்திடவே (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

    2.சொல்லுக் கடங்காவே-பராசக்தி
    சூரத் தனங்களெல்லாம்;
    வல்லமை தந்திடுவாள்-பராசக்தி
    வாழியென் றேதுதிப்போம் (ஓம்சக்தி ஓம்சக்தி ஓ)ம்

    3.வெற்றிவடிவேலன் -அவனுடை
    வீரத்தினைப் புகழ்வோம்;
    சுற்றிநில்லாதேபோ!-பகையே!
    துள்ளிவருகுதுவேல்(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

    4.தாமரைப்பூவினிலே -சுருதியைத்
    தனியிருந்துரைப்பாள்
    பூமணித் தாளினையே-கண்ணிலொற்றிப்
    புண்ணிய மெய்திடுவோம் (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

    5.பாம்புத் தலைமேலே-நடஞ்செயும்
    பாதத்தினைப் புகழ்வோம்
    மாம்பழ வாயினிலே -குழலிசை
    வண்ணம் புகழ்ந்திடுவோம்(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

    6.செல்வத் திருமகளை-திடங்கொண்டு
    சிந்தை செய்திடுவோம்
    செல்வமெல்லாந்தருவாள்-நமதொளி
    திக்கனைத் தும்பரவும்

    >இவ்வாறு திருத்துக. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

    ReplyDelete
    Replies
    1. தமிழனின்/ தமிழனின் தனிச்சிறப்பு ல, ழ, ள இன்று தமிழ்சமுதாயம் தமில் என்றல்லவா உச்சரிக்கிறது.

      Delete
  3. திருத்திக் பதிவிட்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. வண்ணம் வன்மை
    சிந்தை சிந்தனை
    எது சரி சார்

    ReplyDelete