Monday, August 27, 2012

Chinnanchiru Pen Pole - சின்னஞ்சிறு பெண்போலே


ராகம்: சிந்துபைரவி 
இயற்றியவர் : உளுந்தூர்பேட்டை சண்முகம் 

சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி
சீவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள் 
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது 
பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது ||
மின்னலைப்போல் மேனி அன்னை சிவாகாமி 
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமேல்லாம் நிறைவாள் 
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள் 
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் ||


Thursday, August 2, 2012

Madhura madhura venu geetha - மதுர மதுர வேணுகீத


ராகம்: அடானா 

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 



மதுர மதுர வேணுகீத மோஹா 
மதன குசும சுகுமார தேவ ||

ம்ருதுதர பல்லவ  பதகர யுகவர 
முதித்த மனோஹர மோகன கிரிதர 
ஜனுத ஸாஸ தனகுஜெகு தரிஸா
திதித்தலங்கு தக்தோம் தகதித்தலாங்குதகதோம் ||

பகுவித கலபா கஸ்துரி திலகா கந்தம் 
சுகந்தம் சமம்சமாகம 
குகுகு இகிவித கொகிலகலரவ பூஜித பிருந்தாவனசதனா 

மாகேந்திரநீல ஜுதிகோமலாங்க ம்ருதுமந்தஹாச வதனா
குந்தப்ருந்த  மகரந்த பிந்து சமப்ருந்தஹரதறன
சந்திரசூர்யா நயனா நாஹெந்திர  சயன ரமணா 
ரி ம ரி ஸ் ஜனுதகிட ஸா ரி   நி 
திதித்தலாங்குதகதோம் தகதித் தலாங்குதகதூம் தகதிகதலாங்குதகதோம் ||

வேணுகீத மோஹா நந்தலாலா நந்தலாலா 
நந்தலாலா நந்தலாலா நந்தலாலஹே கோபாலா 


காக்கை சிறகினிலே நந்தலாலா 
நிந்தன் கரிய நிறம் தொன்றுதையா நந்தலாலா 
நந்தலாலஹே கோபாலா நந்தலாலா நந்தலாலா 

பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா 
நிந்தன் பச்சை நிறம் தோன்றுதைய நந்தலாலா 
நந்தலாலஹே கோபாலா நந்தலாலா நந்தலாலா 

கேட்கும் ஒலிகள்ளெல்லாம் நிந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா 
நான் தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா 
நந்தலாலஹே கோபாலா நந்தலாலா நந்தலாலா 
கோபாலா கோபாலா கோபாலா  
நந்தலாலா நந்தலாலா

இச்சுவை தவிர யான்போய் இந்திரா லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கன்மா நகருளானே 
கோபாலா கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா 
கோபாலா கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா 
ராதாலோல சின்னிக்ருஷ்ண கோபாலா பால 
கோபாலா பாலா நீல பாலா 
நீல பாலா ஆனந்த லீலா 
ஆனந்த லீலா முரளி லோல 
முரளி லோல பக்தபரிபாலா 
பக்தபரிபாலா பிருந்தவன பாலா 
ஓஹோ ராதாலோல சின்னிக்ருஷ்ண கோபாலா பால 
கோபாலா பால நீல பால