Tuesday, April 5, 2011

Paarvai ondre pothume - பார்வை ஒன்றே போதுமே



ராகம் : சுருடி

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 



பார்வை ஒன்றே போதுமே 
கள்ள பார்வை ஒன்றே போதுமே 
சங்க பதுமநிதி இரண்டும் வலியதந்தால் என்ன ||

கார்முகில் போல் வண்ணன் கதிர் என்ன மதி என்ன 
கருவிழி கடலினை சற்றே திறந்து
கருணை மழை பொழிந்தேன் 
அகம் குளிரும் கள்ள || 

அன்னை யேசொதை  அருகினிலே சென்றிவன்
வெண்ணை திருடி வந்து விந்தை சொல்ல போனான் 
அன்னையின் பின்னே சென்று அணைந்து கொண்டு நின்று 
சொல்லாதே என்று கண்ணால்  சொல்லிடும் ||



Alaipaayuthe Kanna - அலைபாயுதே கண்ணா


ராகம் : கானடா 

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 



அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே 
உன் ஆனந்த மோகன வேணுகானமதில் ||

நிலை பெயராது சிலை போலவே நின்று 
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளிதர 
என் மனமிக அலைபாயுதே கண்ணா ||

தெளிந்த நிலவு பட்ட பகல்போல் எரியுதே உன்
திக்கை நோக்கி என் (இரு)புருவம் நெலியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே 
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே 

கதித்த வனத்தில் உருத்தி பதத்தை 
எனக்கு அளித்து மகிழ்த்தவா 
ஒரு கதித்த மனதில் அனைத்தும்
எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த வா 
அலைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலென  கலிக்கவா
கதரிமானம் உருகி நான் அழைக்கவோ 
இதரமாதருடன் நீ கழிக்கவோ 
இது தகுமோ இது முறையோ 
இது தருமம் தானோ 
குழலூதிடும் பொழுதில் ஆடிடும்
குழைகல்போலவே மனது வேதனை மிக உறும் ||



Nee than Mechi kolla vendum - நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்


ராகம்: ஸ்ரீ ரஞ்சினி 

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 



நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும் (கண்ணனை) 
எங்கள் நீல நிரமேனி மாதவன் செய்வது 
நிமிஷங்கள் போவது யுகமாய் ஆகுது ||

காதார குழலூதி கன்றோடு விளையாடி 
கண்முன்னே வந்து நின்று ஆட்டமும் ஆடி 
ஏதொதே ஜாலங்கள் செய்வதும் ஓடி ஓடி 
எழிலுறும் மங்கையர் மனதினில் புகுந்து 
களவாடிடும் எனதாருயிர் மகனை ||

செய்யும் துஷ்ட தனத்திற்கோர் எல்லையே  இல்லை 
தேடிப்பிடிக்க என்னால் சக்தியும் இல்லை 
கையும் களவும்மாக காலமும் வல்லை 
ஆனால் காலம் தவறாது கொள் சொல்ல வந்துநின்ற 
மாதர்க்கு விடை சொல்ல நேரமும் இல்லை ||




Kaatrinile varum geetham - காற்றினிலே வரும் கீதம்


ராகம்: சிந்துபைரவி 

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 


காற்றினிலே வரும் கீதம் 
கண்கள் பணித்திட பொங்கும் கீதம் 
கல்லும் கனியும் கீதம் 
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் 
பண்ணொளி கொஞ்சிடும் கீதம்

காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் 

மதுர மோகன கீதம் 
நெஞ்சினிலே இன்ப தனலை எழுப்பி 

நினைவு அளிக்கும் கீதம் 


சுனை வண்டுடன் சோலை குயிலும் மனம் குவிந்திடவும் 
வானவேலிதனில் காரகனங்கள் கலங்கி நின்றிடையும்    
ஆஎன் சோல்வேன் மாயப்பிள்ளை வெங்குழல் பொழி கீதம் ||

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் ஊலாவிடும் நதியில் 
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான் 
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ ன் உள்ளம் ||



Maadumeykkum Kanne - மாடுமேய்க்கும் கண்ணே


ராகம்: செஞ்சுரீடி 
இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர் 

மாடுமேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன் 

காய்சின பாலு தரேன் கல்கண்டு சீனி தரேன் 
கைநிறைய வெண்ணை தரேன் வெய்யிலிலே போக வேண்டாம் (மாடு)
 காய்ச்சின பாலும் வேண்டாம் கல்கண்டு சீனி வேண்டாம் 
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒருநொடியில் திரும்பிடுவேன் 
போகவேணும் தாயே தடை சொல்லாதே நீயே 

யமுனா நதி கரையில் எப்பொழுதும் கள்வர்பயம் 
கள்வர் வந்து உனை அதித்தல் கலங்கிடுவாய் கண்மணியே (மாடு)
 கள்ளனுகோர் கள்ளன் உண்டோ கண்டதுண்டோ சொல்லும்மம்மா 
கள்வர் வந்து எனை அடித்தல் கண்டதுண்டம் செய்திடுவேன் 
போகவேணும் தாயே தடை சொல்லாதே நீயே 

கோவர்தனகிரியில் கோரமான மிருகங்கள் உண்டு 
கரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
காட்டு ம்ருகங்களெல்லாம் என்னை கண்டால் ஓடி வரும் 
கூட்ட கூட்டமாக வந்தால் வேட்டையாடி ஜெயித்திடுவேன் 
போகவேணும் தாயே தடை சொல்லாதே நீயே 

பட்சமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டல் 
என்ன பதில் சொல்லவேண்ட என்னுடைய கண்மணியே (மாடு)
பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன் 
தேடியே  நீ வருகையிலே ஓடிவந்து நின்றிடுவேன் 
போகவேணும் தாயே தடை சொல்லாதே நீயே (மாடு)



Vishamakaara Kannan - விஷமக்கார கண்ணன்


ராகம்: செஞ்சுருட்டி    

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 


விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன் 
பொல்லாத விஷமக்கார கண்ணன் 

வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய் ஆட்டமாடி 
நாழிக்கொரு லீலை செய்யும் நந்தகோபல க்ருஷ்ணன்  ||

வேண்ணை பானை மூடக்கொடது
இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது 
இவன் அம்மா கிட்ட சொல்லக்கூடாது 
சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க ஒண்ணாது 
இவனை சும்மா ஒரு பேச்சுக்காணும் திருடனென்று சொல்லிவிட்டால் 
அம்மா பாட்டி அத்தை தாத்தா அத்தனையும் திருடன் என்பான் ||

நீலமேகம் போலே இருப்பன்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடி இருப்பன் 
கோலப்புள்ளங்குழல் ஊதி கோபிகளை கள்ளம்மாடி
கொஞ்சம்புற வெண்ணை தாடி என்றுகேட்டு ஆட்டம்மாடும்  ||

பக்கத்துக்கு வீட்டு பெண்ணை அழைப்பான் (கண்ணன்)
மூக்காரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான் 
எனக்கது  தெரியாதென்றால் நெக்குருக கிள்ளிவிட்டு
விக்கி விக்கி அழும்போது இது தாண்டி மூக்காரி என்பான் ||



Swagatham Krishna - ஸ்வாகதம் கிருஷ்ணா



ராகம் : மோகனம் 
இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 

ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா 
இக ஸ்வாகதம் கிருஷ்ணா ||
மதுராபுரி சாதனா மிருது வதனா 
மதுசூதனா( இக ஸ்வாகதம் கிருஷ்ணா )

போகதாப்த  சுலபா சுபுஷ்பா கந்த கலபா 
கஸ்துரி திலமஹிபா  மமகாந்தனந்த கோபகந்த (ஸ்வாகதம் கிருஷ்ணா)

முஷ்டிகாசூர சாநூரமல்ல
மல்லவிசாரத மதுசூதனா (குவலயபீட்ட)
மர்தன காளிங்கனர்தன
கோகுலரக்ஷன சகலசுலக்ஷன தேவ 
சிஷ்டஜனபால சங்கல்பகல்ப
கல்ப சதகோடி அசமபராபாவ 
தீரமுநிஜன விஹார மதன 
சுகுமார தைத்ய சம்ஹாரதேவா 
மதுர மதுர ரதிசாகச சாகச 
ப்ரஜயுவ தீஜன மானசபூஜித 

ஸ்  த ப க ரி ப க ரி ஸ த ஸ 
ஸ ரி க ப த 
ஸ்  த ப க ரி ப க ரி ஸ த ஸ


ஸ ஸ ரி ரி க க ப த 
ஸ் ஸா த ப ப க ரி ரி  
ப க ரி ஸ த ஸ
ஸ ரி க ரி க ப க ப த 
ஸ் த ப க ரி ப க ரி ஸ த ஸ

தத்தி தகஜனுதோம் தித்தகஜனுதோம்  தகஜனுதோம் 
ஸ்  த ப க ரி ப க ரி ஸ த ஸ 
தத்தி தகஜனுதோம் தித்தகஜனுதோம்  தகஜனுதோம் 
ஸ்  த ப க ரி ப க ரி ஸ த ஸ 
தகதறி குகுந்தன கிடதகதீம் (8) 
(ஸ்வாகதம் கிருஷ்ணா )