Monday, April 4, 2011

Aadathu asangaathu - ஆடாது அசங்காது வா கண்ணா




ராகம்: மத்யமாவதி 
இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 

ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ )  
உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து 
அசைந்து ஆடுதே எனவே (ஆடாது)

ஆடலை காண (கண்ணா உன் ) 
தில்லை அம்பலத்து இறைவனும் 
தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார் 
ஆதலினால் சிறு யாதவனே
ஒரு மா மயிலிறகனி மாதவனே நீ ( ஆடாது )

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்போளிதிடுமே
அதை செவி மடுத்த பிறவி மனம்களிதிடுமே 
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே 
மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே 
பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று (2 )
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளிதிடுமே

குழல் ஆடிவரும் அழகா உனை 
காணவரும் அடியார் எவராயினும் 
கனக மணி அசையும் உனது திருநடனம் 
கண்பட்டு போனால் மனம் புண்பட்டுபோகுமே (ஆடாது)




7 comments:

  1. சிலம்போளிதிடுமே என்பது தவறு. சிலம்பொலித்திடுமே என்று திருத்த வேண்டும்

    ReplyDelete
  2. குழல் பாடி அல்லது ஊதி வரும் அழகா என்று திருத்த வேண்டும்

    களித்திடுமே (த்) வர வேண்டும்

    ReplyDelete
  3. உனைக் காணவரும் (க்) வர வேண்டும்

    ReplyDelete
  4. முருகன், சிவன் ஆகிய தெய்வங்களை இணைத்து எழுதிய கற்பனை. அற்புதம்

    ReplyDelete