Tuesday, March 21, 2017

Unnai allal - உன்னையல்லால்


ராகம்: கல்யாணி 
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

உன்னையல்லால் வேறே கதியில்லை அம்மா உலகெல்லாம் ஈன்ற அன்னை  

என்னையோர் வேடமிட்டு உலகநாடக அரங்கில் ஆடவிட்டாய் (அம்மா)
இனி ஆடமுடியாது(என்னால்) திருவுள்ளம் இறங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க | |

நீயே மீனாட்சி காமாட்சி நீலாயதாக்ஷி எனபல பெயருடன் எங்கும் நிறைந்தவள் 
என்மன கோயிலினில் எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் | |


Ragam: Kalyani
Composer: Papanasam Sivan.

Unnai allal vere gathi illai amma ulagellam indra annai

ennai oer vedamittu ulaga nadaga arangil aadavittaai
ini aada mudiyaathu (ennaal) thiruullam iranki aadinathu pothumendru ooivalikka | |

neeye Meenakshi Kamatchi Neelayathakshi yenapala peyarudan engum nirainthaval
yen mana koyilinil yezhuntharuliya thaye thirumayilai valarum | |

Thursday, February 16, 2017

Hari mana tumi - ஹரி மனா துமி


ராகம்: பிருந்தாவன சாரங் 

ஹரி மனா துமி கோவிந்தா மனா துமி
கோபால மனா துமி நாராயணா (2)
கோவிந்த கோபால ஹரி நாராயணா  (2)

ராம மனா ராஜா ராம மனா சீதா
ராம மனா ஆத்மா ராம மனா (2)  (ஹரி மனா )

ஷ்யாமமனா கன ஷ்யாமமனா மேக
ஷ்யாமமனா ராதே ஷ்யாமமனா (2)

குஞ்சவிஹார கோவிந்தா கோரஸஹோரா கோவிந்தா
கோபிகா ஹ்ருதய நந்தகிஷோரா பீதாம்பரதார கோவிந்தா
 (ஹரி மனா )




Ragam: Brindava sarang

Hari mana tumi govinda mana tumi 
gopala mana tumi narayana 
Govinda gopala hari narayana

Rama mana raja rama mana sita
rama mana atma rama mana (2) (Hari mana )

Shyama mana gana shyama mana megha
shyama mana radhe shyama mana (2) 

kunjavihara govinda korasahora govinda
gopika hrudhaya nandhakishora peethambaradhara govinda

(Hari mana )


Thursday, February 2, 2017

Vanamali vasudeva - வனமாலி வாசுதேவ

ராகம்: பிருந்தாவன சாரங்கா 

வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா ரமணா
சசிவதனா சரஸிஜநயனா ஜகன்மோஹன ராதா ரமணா

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா ராதாரமணா 
பக்தர்களில் குறைதீர்க்கும் ஸ்ரீரங்கா ரதராமணா | |

வெண்ணனையுண்ட மாயவனே கண்ணா நீ ராதாரமணா 
வேண்டும்வரம் தந்திடுவாய் ஸ்ரீரங்கா ராதாரமணா  | |







Friday, January 6, 2017

Ramanuja Killikanni - ராமானுஜ கிளிகன்னி

ராகம்: செஞ்சுருட்டி 

ஆதிசேஷன் அம்சம்மடி ஆண்டாளின் அண்ணனடி
ஆளவந்தாருக்கு  அடிமையடி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |

அரங்கனின் அடிமையடி வேங்கடத்து வேதியனடி
பெரும்புதூர் வள்ளலடி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |

தேவராஜ தாசனடி பார்த்தசாரதி புத்திரனடி
பாருக்கெல்லாம் தெய்வமடி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |

நாரணனை காட்டினான்டி செல்வப்பிள்ளைக்கு தந்தையடி
வைரமுடி சாற்றினான்டி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |

சென்னிய சூடுவாரை வைகுந்ததில் வாழவைக்கும்
உய்யும் வழி அதுவே கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |