Showing posts with label Varaali. Show all posts
Showing posts with label Varaali. Show all posts

Thursday, September 26, 2013

Kaa vaa vaa - கா வா வா

ராகம்: வராலி
இயற்றியவர் : பாபநாசம் சிவன்

கா வா வா கந்தா வா வா
என்னை காவா வேலவா 
முருகா வா வா கந்தா வா வா
என்னை காவா வேலவா 
ஷண்முகா வா வா கந்தா வா வா 
என்னை காவா வேலவா 
பழனிமலை உறையும் முருகா வா வா 
கந்தா வா வா என்னை காவா வேலவா 

தேவாதிதேவன் மகனே வா 
பரதேவி மடியில் அமரும் குகனே வா
வள்ளி தெய்வயானை மணவாளா வா 
சரவணபவ பரம தயாளா வா 

ஷண்முகா வா வா கந்த வா வா 
என்னை காவா வேலவா 
பழனிமலை உறையும் முருகா வா வா
கந்தா வா வா என்னை காவா வேலவா 

ஆபத்திருளர அருளொளி தரும் 
அப்பனே அண்ணலே அய்யா வா 
பவத்திரல்தரும் தாபமகல வரும்
பழனி வளர் கருணை மழையே வா
தாபத்ரய வெயிலற நிழல் தருவாய் 
தருவே என் குலகுருவே வா
ஸ்ரீ பத்மநாபன் மருகா வா 
ராம தாசன் வணங்கும் முத்தையா விரைவோடு 

கா வா வா கந்தா வா வா என்னை கா வா வேலவா
முருகா வா வா ஷண்முகா வா வா
என்னை காவா வேலவா