Thursday, June 20, 2013

Mannupugazh kosalai - மன்னுபுகழ் கோசலைதன்

ராகம்:    ராகமாலிகை

இயற்றியவர்:    குலசேகர ஆழ்வார்


மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோண்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்

கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ

குங்குமல்லி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாள்
தங்குபெரும் புகழ்ஜனகன் திருமருகா தாசரதி

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ

தாமரைமேல் அயலவனை படைத்தவனே தயரதன்தன்
மாமதலாள் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்

காமரங்கள் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா ராகவனே தாலேலோ

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே
அலைகடலை கடைந்தமரற்கு அமுதருளி செய்தவனே

கலைவலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே ஸ்ரீராம தாலேலோ

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்தடிவணங்க அரங்கநகர் துயின்றவனே

காவிரி நல்நதி பாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெண் சிலைவலவா ராகவனே தாலேலோ