Showing posts with label Thilang. Show all posts
Showing posts with label Thilang. Show all posts

Sunday, February 3, 2013

Chinanjiru kuzhanthai ondru - சின்னஞ்சிறு குழந்தை ஒன்று


ராகம்:  திலங்



சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்
சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது

வெற்றி தரும் அதன் கையில் வேலிருந்தது
வில்லும் அதன் விழி எந்தன் மேலிருந்தது
நெற்றி திருநீறு பாலை போலிருந்தது
நீலமயில் மீதிலதன் காலிருந்தது | |

வண்ணமணி மார்பில் முத்து மாலை கிடந்தது
வந்த கிண்கிணி ஓசை காதில் தொடர்ந்தது
பொன்னான அதன் முகமோ பூவை வென்றது
போற்றும் எந்தம் பெயர் எதுவோ முருகன் என்றது | |

கண்களை நான் திறந்தேன் காட்சி மறைந்தது
கண்ட அந்த காட்சி அதன் ஆட்சி விரைந்தது
மண்ணுறங்கும் எனினும் எந்தன்  மனமுறங்கவில்லை
மயக்கும் அந்த முகத்தை தவிர வேறெதுவும் தெரியவில்லை

சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்
சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது | |
கனவில் வந்தது முருகன்....



Monday, March 5, 2012

Prabho Ganapathe - ப்ரபோ கணபதே


ராகம்:திலங் 

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன் 
சன்னதி சரண் அடைந்தோமே

சாந்தசித்த சௌபாக்யங்கள் யாவையும்
தந்தருள் சத்குரு நீயே ||

தேடி தேடி எங்கோ ஓடுகின்றோம் 
உன்னைதேடி கண்டுகொள்ளலாமே 

கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய 
குன்றென விளங்கும் பெம்மானே ||

ஆதிமூல கணநாத கஜானன அற்புத வல ஸ்வரூப
தேவ தேவ ஜெய விஜய விநாயக சின்மயா பர சிவா தீபா ||

பார்வதி பால அபார வார வர பரம பகவ பவ சரணா 
பக்த ஜனசுமுக பிரணவ விநாயக பாமால பரிமள சரணா||


Vezhamugathu Vinayakane - வேழ முகத்து விநாயகனே


ராகம் - திலங் 

வேழ முகத்து விநாயகனே 
வந்தருள்வாய் கணநாயகனே
விக்னநிவாரண தாயகனே 
வித்தகன் சிவனருள் பாலகனே 
சந்நிதி வந்தோம் உந்தனை கண்டேன் 
முன்னவனே கணநாயகனே 
அத்திமுகப்பெருமானுனை அடைந்தேன் 
நித்தமருள் கணநாயகனே கணநாயகனே