Sunday, February 3, 2013

Chinanjiru kuzhanthai ondru - சின்னஞ்சிறு குழந்தை ஒன்று


ராகம்:  திலங்



சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்
சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது

வெற்றி தரும் அதன் கையில் வேலிருந்தது
வில்லும் அதன் விழி எந்தன் மேலிருந்தது
நெற்றி திருநீறு பாலை போலிருந்தது
நீலமயில் மீதிலதன் காலிருந்தது | |

வண்ணமணி மார்பில் முத்து மாலை கிடந்தது
வந்த கிண்கிணி ஓசை காதில் தொடர்ந்தது
பொன்னான அதன் முகமோ பூவை வென்றது
போற்றும் எந்தம் பெயர் எதுவோ முருகன் என்றது | |

கண்களை நான் திறந்தேன் காட்சி மறைந்தது
கண்ட அந்த காட்சி அதன் ஆட்சி விரைந்தது
மண்ணுறங்கும் எனினும் எந்தன்  மனமுறங்கவில்லை
மயக்கும் அந்த முகத்தை தவிர வேறெதுவும் தெரியவில்லை

சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்
சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது | |
கனவில் வந்தது முருகன்....



5 comments:

  1. May i know who wrote this song?

    ReplyDelete
  2. The song is by poet Ilangkamban and it is tuned by my Guru Swamimalai Sri S Janakiraman

    ReplyDelete
  3. What is the ragam of this song please

    ReplyDelete