Monday, April 4, 2011

Aayarpaadi Maaligaiyil - ஆயர்பாடி மாளிகையில்



ராகம்: குறுஞ்சி 
இயற்றியவர் : கண்ணதாசன் 

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல் 
மாய கண்ணன் தூங்குகிறான் தாலேலோ 
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியபின்  ஓய்வெடுத்து தூங்குகிறான் தாலேலோ ( ஆயர்படி )

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு 
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே 
இவன் உறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ ( ஆயர்படி )

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் 
தாகமெல்லாம் தீர்துகொண்டன் தாலேலோ
அந்த மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும் 
யார் அவனை தூங்கவிட்டார் தாலேலோ (ஆயர்படி)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் 
அன்னையரே துயில் எழுப்ப வாரீரோ அவன்
பொன்னழகை பார்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் 
கன்னியரே கோபியரே வாரிரோ கன்னியரே கோபியரே வாரிரோ (ஆயர்படி)



No comments:

Post a Comment