Tuesday, April 5, 2011

Vishamakaara Kannan - விஷமக்கார கண்ணன்


ராகம்: செஞ்சுருட்டி    

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 


விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன் 
பொல்லாத விஷமக்கார கண்ணன் 

வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய் ஆட்டமாடி 
நாழிக்கொரு லீலை செய்யும் நந்தகோபல க்ருஷ்ணன்  ||

வேண்ணை பானை மூடக்கொடது
இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது 
இவன் அம்மா கிட்ட சொல்லக்கூடாது 
சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க ஒண்ணாது 
இவனை சும்மா ஒரு பேச்சுக்காணும் திருடனென்று சொல்லிவிட்டால் 
அம்மா பாட்டி அத்தை தாத்தா அத்தனையும் திருடன் என்பான் ||

நீலமேகம் போலே இருப்பன்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடி இருப்பன் 
கோலப்புள்ளங்குழல் ஊதி கோபிகளை கள்ளம்மாடி
கொஞ்சம்புற வெண்ணை தாடி என்றுகேட்டு ஆட்டம்மாடும்  ||

பக்கத்துக்கு வீட்டு பெண்ணை அழைப்பான் (கண்ணன்)
மூக்காரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான் 
எனக்கது  தெரியாதென்றால் நெக்குருக கிள்ளிவிட்டு
விக்கி விக்கி அழும்போது இது தாண்டி மூக்காரி என்பான் ||



No comments:

Post a Comment