Sunday, July 20, 2025

Guruvayurappane Gurunaatharoopane - குருவாயூரப்பனே குருநாதரூபனே

இயற்றியவர் - சுவாமி ஹரிதாஸ் கிரி 


 குருவாயூரப்பனே குருநாதரூபனே

திருவாய்மலர்ந்தருள வா வா வா 


மருளாதிருக்கவே மறைகளை கொணர்ந்தவா 

மச்சாவதாரனே வா வா வா 


குறைகளை களைந்திடமேரு குன்றினைசுமந்தவா 

கூர்மாவதாரனே வா வா வா 


நன்றியை மறந்த ஹிரண்யாக்ஷகனை கொல்லவே 

பன்றிரூபம் எடுத்தவா வா வா  வா


வம்புசெய்த ஹிரண்யனை அன்புடன் வதைக்கவே 

கம்பத்தில் தோன்றியநரஹரி வா வா வா 


யாசகம் எடுப்பதுபோல் ராஜனாம் மகாபலியை 

சூசகமாய் வென்றவாமனா வா வா வா 



பிரசமாய்வந்த கார்த்தவீரியன் பரம்பரையை 

வேரறுத்த பரசுராம வா வா வா 


தசரதன் மைந்தனாக தாரணியில் அவதரித்து 

தந்தைசொல்லை காத்த ராமா வா வா வா 


கலப்பை ஆயுதம்கொண்டு கருத்துடனே  காக்கவந்த 

கண்ணனுக்கு மூத்தவனே பலராம வா வா வா 


கோகுலத்தில் கோபாலனாய் கோபியர் உள்ளம் கவர்ந்த 

கோவிந்தன் மாதவனே  வா வா வா 


ஞானானந்தராய் ஞாலத்தில் கலியை நீக்க 

நாட்டமுடன் வந்தவனே வா வா வா