இயற்றியவர்: ஆண்டாள் கற்று(க்) கறவை(க்) கணங்கள் பல கறந்து செற்றார் திறலழிய(ச்) சென்று சேறு(ச்) செய்யும் குற்றம் ஒன்றிலாத கோவலர் தம் பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட சிற்றாதே பேசாதே செல்வா பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்
இயற்றியவர்: ஆண்டாள் தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய(த்) தூபம் கமழ(த்) துயிலணைமேல் கண் வளரும் மாமான் மகளே மணி(க்) கதவம் தாழ் திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ எம(ப்) பெருந்துயில் மந்திர(ப்) பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்
இயற்றியவர்: ஆண்டாள் கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு மேய்வான் பறந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை(ப்) போகாமல் காத்து உன்னை(க்) கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய் பாடி(ப்) பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை(ச்) சென்று நாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்