நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே. மணி(க்) கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில் எழ(ப்) பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலை(க்) கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
இயற்றியவர்: ஆண்டாள் கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய் பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி(ச்) சினத்தினால் தென் இலங்கை(க்) கோமானை(ச்) செற்ற மனத்துக்கு இனியானை(ப்) பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம் அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
இயற்றியவர்: ஆண்டாள் கற்று(க்) கறவை(க்) கணங்கள் பல கறந்து செற்றார் திறலழிய(ச்) சென்று சேறு(ச்) செய்யும் குற்றம் ஒன்றிலாத கோவலர் தம் பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட சிற்றாதே பேசாதே செல்வா பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்