Thursday, September 26, 2013

Pullai piravi - புல்லாய் பிறவி தரவேணும்

ராகம்: செஞ்சுருட்டி     

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 


புல்லாய்  பிறவி தரவேணும் கண்ணா 
புனிதமான பல கோடி பிறவி தந்தாலும் ப்ருந்தாவனமதில் || 

புல்லாகினும் நெடுநாள் நில்லாது ஆதலினால்
கல்லாய் பிறவி  தரவேணும் 
கமலமலரிழைகள் அனைய எனது உள்ளம்
புளகிதம் ஊற்றிடும் பவமற்றிடுமே ||

ஒருகனம் உன் பதம் படும் எந்தன் மேலே  
மறுகணம் நான் உயர்வேன் மென்மேலே 
திருமேனி என் மேலே அமர்திடும் ஒரு காலே 
திருமகள்லேன மலரடி பெயர்ந்துன்னை 
தொடர்ந்த ராதைக்கு இடம் தருவேனே 
திசைஇசை  எங்கணும் பரவிடும் குழலிசை 
மயங்கி வரும் பல கோபியருடனே
சிறந்தரசம் மிதில் நடம் நீ ஆடவும் 
ஸ்ருதியோடு லயம்மிக கலந்து பாடவும்
திளைப்பிலே வரும் களிப்பிலே 
எனக்கினை யாரென மகிழ்வேனே 
தவமிங்கு சுரரொடு முனிவரும் இயலா 
தனித்த பெரும்பெர்ரடைவேனே 
எவ்வுயருக்கும் உள்கலக்கும் இறைவனே
யமுனை துறைவனே (எனக்கும் ஒரு)||





Chinnanchiru Kiliyae - சின்னஞ்சிறு கிளியே

ராகம்: மோகன கல்யாணி 
இயற்றியவர் : மகாகவி சுப்ரமண்ய பாரதி 

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வகளஞ்சியமே 
என்னை கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரியவந்தாய் 
பிள்ளைக்கனி அமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே 
அள்ளி அனைதிடவே    என்முன்னே ஆடிவரும் தேனே || 

ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி 
ஆடித்திரிதல் கண்டால் உன்னைபோய் ஆவிதழுவுதடி 
உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கிவளருதடி 
மெச்சி உனை ஊரார் புகந்தால் மேனிசிளிற்குதடி 
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறிகொள்ளுதடி 
உன்னைதழுவிடிலோர் கண்ணம்மா உன்மத்தமாகுதடி 
உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி 
என்கண்ணீல் பாவைஅன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ 




Aasai mugam - ஆசை முகம்

ராகம்: ராகமாலிகா 
இயற்றியவர்: மகாகவி சுப்ரமண் பாரதி 

ஆசை முகம் மறந்து போச்சே இதை 
யாரிடம் சொல்வேன் அடி தோழி 
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் 
நினைவு முகம் மறக்கலாமோ ||

கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்
கண்ணன் அழகுமுழுதில்லை 
நன்னு முகவடிவு கானில் அந்த 
நல்லமலர் சிரிப்பை காணோம் ||

தேனை மறந்திருக்கும் வண்டும் 
ஒளிச்சிறப்பை  மறந்துவிட்ட பூவும் 
வானை மறந்திருக்கும் பயிரும்  
இந்த வையம்முழுதும் இல்லை தோழி ||

கண்ணன் முகம் மறந்து போனால் 
இந்த கண்கள் இருந்தும் பயனுண்டோ 
வண்ணபடமும் இல்லை கண்டால் 
இனி வாழும் வழி என்னடி தோழி  ||


Anandham Anandham Anandhame - ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே


ராகம்:  மத்யமாவதி 

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே பர 
ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனாரே 
நம்ம ஜானகி மணமகள் ஆனாலே
வந்தவர்க்கும் பார்தவற்கும் ஆனந்தம் 
சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்

நாம் செய்த பூஜாபலன் இன்றே பலித்ததம்மா ||


Tuesday, September 24, 2013

Ganesha pancharatna - கணேஷ பஞ்சரத்னா


ராகம்: ராகமாலிகை
இயற்றியவர்: ஆதி சங்கரர்

முதாகராத்த மோதகம் சதாவிமுக்த்தி சாதகம்
கலாதராவதம்சகம் விலாசிலோக ரக்ஷகம்

அனாயகைக நாயகம் வினாசிதேப  தைத்யகம்
நதாசுபாசு நாஷகம் நமாமிதம் விநாயகம்

நதேதராதி பீகரம் நவோதிதார்க பாஸ்வரம்
நாமத் சுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம்

சுரேஷ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம்
மகேஸ்வரம் சமாஷ்ரையே பராத்பரம் நிரந்தரம்

சமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரே பவக்த்ர  மக்ஷ்ரம்

க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஷஷ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

அகிம்ச்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் சுராரி கர்வ சர்வணம்

ப்ரபஞ்ச நாஷ பீஷணம் தனஞ்சயாதி பூஷணம்
கபால தான வாரணம் பாஜே புராண வாரணம்

நிதாந்தகாந்த தண்டகான்தி மண்தகாந்த காத்மஜம்
அசிந்த்ய ரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம்

ஹ்ருதந்தரே நிரந்தரம் வசந்தமேவ யோகினாம்
தமேகதம்  தமேவதம் விசிந்தயாமி சந்ததம்


Thursday, June 20, 2013

Mannupugazh kosalai - மன்னுபுகழ் கோசலைதன்

ராகம்:    ராகமாலிகை

இயற்றியவர்:    குலசேகர ஆழ்வார்


மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோண்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்

கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ

குங்குமல்லி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாள்
தங்குபெரும் புகழ்ஜனகன் திருமருகா தாசரதி

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ

தாமரைமேல் அயலவனை படைத்தவனே தயரதன்தன்
மாமதலாள் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்

காமரங்கள் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா ராகவனே தாலேலோ

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே
அலைகடலை கடைந்தமரற்கு அமுதருளி செய்தவனே

கலைவலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே ஸ்ரீராம தாலேலோ

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்தடிவணங்க அரங்கநகர் துயின்றவனே

காவிரி நல்நதி பாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெண் சிலைவலவா ராகவனே தாலேலோ


Sunday, February 3, 2013

Bhaja Bhagavantham - பஜ பகவந்தம்



ராகம்: ராகமாலிகா                          தாளம்: ஆதி 
இயற்றியவர்: K லக்ஷ்மண  ஷர்மா

 (ராகம் : தேஷ்)
பஜ பகவந்தம் ரமணம்  காந்தம் பரமாத்மானம்  மானசநித்யம் 
அணுதித மமதா  அந்தம் சாந்தம்  அபிதித  பேத  மகாகம  ரூபம் 
மௌன வ்யாக்யா சமுதித  தர்பம் பரமம் நஸ்தம் சதத  விமுக்தம் ||
(ராகம் : பெசன்ட் )
சத்யம்  ஜகதபி  தேகம  பித்வம்  மத்வா மஹா  மோஹா  வேத்யம் 
விஷ்வோ  ஜீவோ ஜகதிதேதே புத்தி  விகல்பா  ச்வஹிபரதேதே ||
(ராகம் : சிந்துபைரவி )
 தேவோனத்வம்  ஜீவோனத்வம்  பாஷ்ய  க்ருதந்தஹா  கொஸ்தி  விக்னேஷம் 
 ஈஷோ புருரபி ஜாத்மா ரமணம்  தாத்யா  முக்திம்  சத்கருனைவ ||